உள்ளூர் செய்திகள்

மாணவியரிடம் அத்துமீறல்; ஆசிரியர் கைது

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த மாதம் 22ல், துாத்துக்குடியில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.இதில் சல்மா பள்ளியில் இருந்து ஐந்து மாணவியரை உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங் என்பவர் அழைத்து சென்றார். மறுநாளும் போட்டி நடந்ததால் இரவு அங்குள்ள அறையில் தங்கி இருந்தனர்.அப்போது மாணவியருக்கு மது கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயன்றார். இதை தாமதமாக அறிந்த பெற்றோர், நேற்று சல்மா மெட்ரிக் பள்ளியை முற்றுகையிட்டனர். கோவையில் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங்கை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்