உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் பஸ் நிலையத்தில் மோதல்

சங்கராபுரம்: சங்கராபுரம் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின் போது விளையாட்டு மைதானத்திற்கு சென்று மீண்டும் வகுப்புக்கு வந்தபோது, 12ம் வகுப்பு மாணவர் மீது, 11ம் வகுப்பு மாணவர் மோதியுள்ளார். இதனால், மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிலையம் வந்தபோது, பள்ளியில் நடந்த பிரச்னை காரணமாக மீண்டும் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.பஸ் நிலையத்தில் நுாற் றுக்கணக்கான மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.சில நாட்களுக்கு முன் ஐ.டி.ஐ., மாணவர்கள் தாக்கி கொண்டனர். சங்கராபுரம் பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தாக்கி கொள்ளும் சம்பவம் அவ்வப்போது தொடர்ந்து நடக்கிறது. பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்