உள்ளூர் செய்திகள்

கல்லுாரி மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

திருக்கனுார்: மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்தது.திருக்கனுார் அடுத்த சோம்பட்டில் நடந்த பயிற்சியை, கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர் துவக்கி வைத்தார்.விவசாயி ஜஹாங்கீர் பங்கேற்று, தேனீ வளர்ப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். நலப்பணித்திட்ட பொறுப்பாளர் ரேவதி, பூச்சியல் மற்றும் உழவியல் துறை முகிலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.பூச்சியல் துறை உதவி பேராசிரியை சரோஜா, தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியை இலக்கியா, திருக்கனுார் வேளாண் அலுவலர் தமிழ்செல்வன், உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், தங்கதுரை, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்