உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி சுற்றுச்சுவரில் தேச தலைவர்கள் ஓவியம்

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் மின்னல் சித்தாமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.பள்ளியில் இருந்த பழைய சுற்றுசுவர், ஆங்காங்கே விரிசில் ஏற்பட்டு, இடிந்து விழுந்து வந்தது.இதன் காரணமாக, பழைய சுவர் இடித்து அகற்றப்பட்டு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 2023 - -24 நிதியாண்டில், 7.80 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி ஏற்பாட்டில், திருவள்ளுவர், பாரதியார், காந்தி, நேரு, அம்பேத்கர், அப்துல் கலாம் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் ஓவியம் மற்றும் திருக்குறள், காலை உணவு திட்டம் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்