உள்ளூர் செய்திகள்

பல்கலை பதிவாளர் மீது போலி சான்றிதழ் புகார்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பொறுப்பு பதிவாளர் ராஜசேகரன் மீது, போலி சான்றிதழ் புகார் எழுந்துள்ளது.சென்னை, காரப்பாக்கத்தில் உள்ள, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், கடந்த ஆண்டு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதனால், அப்போது பதிவாளராக இருந்த ராமகிருஷ்ணன், அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொறுப்பு பதிவாளராக ராஜசேகரன் பணி அமர்த்தப்பட்டார்.இந்நிலையில், அவர், அப்பணியில் சேர, அனுபவ சான்றிதழ்களை, போலியாக தயாரித்து வழங்கியதாக, உயர்கல்வித் துறை செயலருக்கு, சிலர் புகார் அளித்துள்ளனர். இப்புகார் குறித்து விசாரிக்கும்படி, கல்லுாரி கல்வி இணை இயக்குநருக்கு, துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்