வினாக்களுக்கு உடனடி விடை; மாணவர்களுக்கு பரிசு மழை
திருப்பூர்: தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கில் பொது அறிவு குறித்த போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. விரைவாக, மிகச்சரியாக விடையெழுதிய மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவி பூமிகா முதலிடம் பெற்று லேப்டாப் வென்றார். இரண்டாமிடம் பெற்ற கிப்தாமிராக்லின் டேப் வென்றார். பிரணீதா, ஸ்வாதிலட்சுமி, ஜான், பிரனேஷ், கனிஷ்கா ஆகியோர் ஆறுதல் பரிசாக ஸ்மார்ட் வாட்ச் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி ஆலோசகர் அஸ்வின் பரிசு வழங்கினார்.