ஷார்ஜா நகரில் தொழில்நுட்ப பணிக்கு ஆட்கள் தேவை
சென்னை: மேற்கு ஆசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா நகரில், பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்களில் பணிபுரிய, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் அறிக்கை:ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா நகரில், 'ஸ்டீல் ஸ்ட்ரக்சுரல் பேப்ரிகேட்டர்கள், சி.என்.சி., லேசேர் கட்டிங் மெஷின் புரோகிராமர் கம் ஆப்ரேட்டர்கள், ஹெவி பஸ் டிரைவர்கள், மார்க்கெட்டிங் மற்றும் புரடக் ஷன் இன்ஜினியர்கள்' உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.விருப்பம் உள்ள ஆண்கள், தங்கள் சுய விபரம் அடங்கிய விண்ணப்ப படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலை, ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரும் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இப்பணிகளுக்கான நேர்காணல், அடுத்த மாதம் 3, 4ம் தேதிகளில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், ஆலந்துார் ரோடு, திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -600 032 என்ற முகவரியில் நடக்க உள்ளது. கூடுதல் தகவல்களை, www.omomanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.