உள்ளூர் செய்திகள்

டாக்டர் அமர் அகர்வாலுக்கு மருத்துவத்தில் கவுரவ விருது

சென்னை: சென்னை கருவிழி மாற்று சிகிச்சையை தவிர்ப்பதற்கான ஊசித்துளை அறுவை சிகிச்சை செயல்முறைக்கு, டாக்டர் அமர் அகர்வாலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்கன் சொசைட்டி ஆப் கேட்டராக் அண்டு ரெப்ராக்டிவ் சர்ஜரியின் மாநாடு, அமெரிக்க லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சமீபத்தில் நடந்தது.இதில், கருவிழி மாற்று சிகிச்சையை நோயாளிகளுக்கு தவிர்ப்பதற்காக, ஊசித்துளை பியூப்பிலோபிளாஸ்டி என்ற யுக்தியை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் அமர் அகர்வால் அறிமுகப்படுத்தினார்.இதன் வாயிலாக, கருவிழிப்படலத்தின் அளவை குறைத்து பார்வை உருவாக்குகிறது. இதற்காக, மாநாட்டின் நடுவர் டாக்டர் ஜேசன் ஜோன்ஸ், டாக்டர் அமர் அகர்வாலுக்கு, கவுரவ விருது வழங்கினார்.இதுகுறித்து, டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது:கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற பேராசிரியர்கள் மத்தியில், அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊசித்துளை பியூப்பிலோபிளாஸ்டி மருத்துவ முறை, உலகளவில் நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. பார்வை திறனையும் பெறும் நம்பிக்கையை அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்