உள்ளூர் செய்திகள்

சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லை; டாக்டர் கருத்தால் புகைச்சல்

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கருவிகள் பற்றாக்குறை நிலவுவதால், அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்படுவதாக சிறுநீரகத் துறை தலைவர் ஹரிஸ் சிரக்கல் குற்றஞ்சாட்டியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மூத்த டாக்டரும், சிறுநீரகவியல் துறை தலைவருமான ஹரிஸ் சிரக்கல், சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.அதில், அரசு மருத்துவமனையில் கருவிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக கூறியிருந்தார். ஆனால், அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். இதற்குள் இந்த பதிவு பரவி சர்ச்சையானது. இதுகுறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் இது அரசியல் ரீதியிலும் விமர்சனத்தை ஏற்படுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்