உள்ளூர் செய்திகள்

ஆடைகளை அவிழ்த்து சோதனை: பள்ளி முதல்வர், உதவியாளர் கைது

தானே: மஹாராஷ்டிரா பள்ளியில் மாணவியர் ஆடைகளை அவிழ்த்து சோதனையிட்ட சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் சஹாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி கழிப்பறையில், கடந்த 8ம் தேதி ஆங்காங்கே ரத்தத் துளிகள் தென்பட்டன. இதைஅறிந்த பள்ளி முதல்வர், ஐந்து முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியரை பள்ளி கூட்டரங்கத்துக்கு அழைத்தார்.கழிப்பறையில் தென்பட்ட ரத்த துளிகளை, வீடியோ எடுத்து, மாணவியருக்கு போட்டு காட்டிய நிர்வாகம், மாதவிடாய் உள்ளவர்களை சோதனையிட முடிவு செய்தது.இதற்காக, பள்ளி முதல்வர் அறிவுறுத்தலின் படி மாணவியரை கழிப்பறைக்கு அழைத்து சென்ற பெண் உதவியாளர், அங்கு மாணவியரின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை அவிழ்த்து சோதனைஇட்டார்.இதனால் அதிர்ச்சிஅடைந்த சிறுமியர், வீட்டுக்கு சென்று தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் பள்ளி முன் குவிந்த மாணவியரின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளி முதல்வர், நான்கு ஆசிரியைகள், உதவியாளர் உட்பட எட்டு பேர் மீது, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் பள்ளி முதல்வர், பெண் உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்