உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி பல்கலை., பன்முகத்தன்மையுடையது துணை வேந்தர் பிரகாஷ்பாபு பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பயில வந்துள்ள சர்வதேச மாணவர்களுக்கு பல்கலைக் கழகத்தின் பன்முகத்தன்மை குறித்து விளக்கப்பட்டது.புதுச்சேரி பல்கலைக்கழகம் ஐரோப்பியாவில் உள்ள பல சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துள்ளது. இந்த திட்டத்தின்படி மாணவர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அதன்படி, பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்ற னர். இம்மாணவர்களுடன் துணை வேந்தர் பிரகாஷ் பாபு கலந்துரையாடினர். சர்வதேச பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மாணவர்கள் தங்களுடைய புதுச்சேரி பல்கலைக் கழக அனுபவங்களை பகிர்ந்தனர்.துணை வேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், புதுச்சேரி பல்கலைக் கழகம் பன்முகத் தன்மையுடையது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். பல நாடுகளை சேர்ந்த மாணவர்களும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களுக்கென தனி விடுதிகள் உள்ளன. அவற்றில் அனைத்து பொதுவான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.தொடர்ந்து புதுச்சேரியின் பன்முகதன்மை, சக மாணவனர்களின் ஒத்துழைப்பு குறித்தும் விளக்கப்பட்டது. இதேபோல் மேலாண்மை ஆய்வுகள் சட்டம் மற்றும் காரைக்கால் வளாகத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள் பரிமாற்ற செமஸ்டரை தொடர பிரான்ஸ், ஜெர்மனியில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு செல்ல உள்ளனர். அவர்களில் நான்கு பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.நிகழ்ச்சியில் சர்வதேச உறவுகள் டீன் ஆனந்தகுமார், துணை டீன் சாரதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்