உள்ளூர் செய்திகள்

மரக்காணத்தில் புதிய அரசு கல்லுாரி எம்.பி., கோரிக்கை நிறைவேறுமா?

விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திண்டிவனம் எம்.எல்.ஏ., தொகுதியில், மரக்காணம் பகுதி அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை அருகில் அமைந்துள்ள மரக்காணத்தில் மீன்பிடி தொழில் மற்றும் உப்பு உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது.இப்பகுதியில் பெரிய அளவிலான கல்வி நிறுவனங்கள் துவக்கப்படவில்லை. இப்பகுதி, நகர்புறத்திற்கு ஈடாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி, அதிகளவில் கிராமப்புறங்கள் அமைந்துள்ளன.மரக்காணம் பகுதி கிராம மக்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயில்வதற்கு வசதியாக, அரசு சார்பில் கலை, அறிவியல் கல்லுாரி துவக்கப்பட வேண்டும் என வி.சி. கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., க்கள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்ந்து, மரக்காணத்திற்கு அரசு கலைக் கல்லுாரி வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஆளுங்கட்சி தரப்பில் கண்டு கொள்வதாக தெரியவில்லை என வி.சி., நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்