உள்ளூர் செய்திகள்

அம்ருதா பல்கலைக்கழகத்தில் தேசிய ஹெச்.பி.சி-குவாண்டம் பயிலரங்கு தொடக்கம்

சென்னை: சென்னை அம்ருதா பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, ஏ.ஐ.சிடி.இ-வாணி உடன் இணைந்து, “அடுத்த தலைமுறை அறிவார்ந்த நகரங்கள் மற்றும் நுண்ணறிவு பயன்பாடுகளுக்கான உயர் செயல்திறன் கணினி மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் 3 நாள் தேசிய பயிலரங்கை தொடங்கியது.சிடாக், பெங்களூருவின் இணை இயக்குநர் டாக்டர் ஹென்றி சுகுமார் முதன்மை விருந்தினராக பங்கேற்று, இந்தியாவின் ஹெச்.பி.சி மற்றும் குவாண்டம் ஆராய்ச்சிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களை விளக்கினார். நிகழ்வில், முதல்வர் டாக்டர் ஜெயகுமார், துறைத் தலைவர் டாக்டர் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த பயிலரங்கில் 50-க்கும் மேற்பட்ட இளம் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். சொற்பொழிவுகள், தொழில்நுட்ப விவாதங்கள், செய்முறை பயிற்சிகள் ஆகியவை இடம்பெறுகின்றன.இந்த முயற்சி, இந்தியாவில் சூப்பர்கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி போன்ற துறைகளில் இளம் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்