உள்ளூர் செய்திகள்

கதை எழுதுவது முதல் டைரக்ஷன் வரை... இனி ஏ.ஐ.,பார்த்துக்கொள்ளும்!

சினிமா உலகம் எப்போதும், புதுமைகளை வரவேற்கும் ஒரு மந்திர உலகம்.அந்த வரிசையில், இப்போது கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை, ஒட்டுமொத்த திரையுலகையும் புரட்டிப் போட, இரண்டு புதிய ஏ.ஐ.,(செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பங்கள் தயாராகி வருகின்றன.ஒரு படத்திற்கு முக்கியமானது கதை. அந்த கதையை, இனி ஏ.ஐ., எழுதப்போகிறது. ஜெனரேட்டிவ் ஏ.ஐ., என்ற தொழில்நுட்பம் இதை சாத்தியமாக்குகிறது. நீங்கள் ஒரு வரியில், ஒரு கருவை சொன்னால் போதும்; அதை பற்றிக்கொண்டு ஒரு முழு திரைக்கதையையே, இந்த ஏ.ஐ., உருவாக்கிவிடும்.கற்பனையும்... தொழில்நுட்பமும் அடுத்தது, ஏஜென்டிக் ஏ.ஐ., இது ஜெனரேட்டிவ் ஏ.ஐ.,யின் அடுத்த கட்டம். சொன்னதை மட்டும் செய்யும் கருவியாக இல்லாமல், சுயமாக சிந்தித்து ஒரு உதவி இயக்குனர் போலவே செயல்படும் திறன் கொண்டது.சுருக்கமாக சொன்னால், இனிவரும் காலங்களில் ஒரு படத்தின் டைட்டிலில் கதை, திரைக்கதை, இயக்கம் என்பதோடு, 'ஏ.ஐ., மேற்பார்வை' என்ற, ஒரு புதிய பெயரையும் நாம் பார்க்கலாம்.மனித கற்பனையும், ஏ.ஐ., தொழில்நுட்பமும் இணையும்போது, திரையில் நாம் காணப்போவது இதுவரை கண்டிராத, புதிய மாயாஜாலமாக இருக்கும் என்பதில், சந்தேகமில்லை என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்