உள்ளூர் செய்திகள்

இந்திய இளைஞர்களின் ரோபோட்டிக்ஸ் திறமைக்கு உலக அரங்கில் வாய்ப்பு

புதுடில்லி: மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு இணைந்து இளைஞர்களுக்கான ரோபோட்டிக்ஸ் சவால் போட்டியை நடத்தியது. புதுமை மற்றும் இளைஞர்கள் தலைமையிலான தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், புதுடில்லியின் யஷோபூமி இந்திய சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த போட்டி நேற்று மாலை நிறைவடைந்தது.இந்த தேசிய அளவிலான சவால், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ரோபோட்டிக்ஸ் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்தியது. இதில் ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பரிசுகளும், புதுமையான முயற்சிகளுக்கான சிறப்பு அங்கீகாரங்களும் வழங்கப்பட்டன.ஜூனியர் பிரிவில் பெங்களூருவின் பிளேட்டோ லேப்ஸைச் சேர்ந்த ஹேயான்ஷ் அணி முதலிடத்தைப் பெற்றது. அவர்கள் 2026 ஜூலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலகளாவிய இறுதிச் சுற்றில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். சீனியர் பிரிவில் வாரணாசியைச் சேர்ந்த தி ஆம்பிஷியஸ் அவெஞ்சர்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 55 அணிகளில் இருந்து 271 பேர் பங்கேற்ற நிலையில், பல்வேறு சுற்றுகள் முடிவில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்