உள்ளூர் செய்திகள்

புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்: தர்மேந்திர பிரதான்

அவனியாபுரம்: 'புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் , ' என , மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்அவர் கூறியதாவது: நான்காம் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன் . மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமத்தை நடத்தி வருகிறது. காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்கிறது. தமிழ் மொழி மிகப்பழமையானது.நம் கலாசாரத்தின் தொன்மையான மொழி. வட இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலிருந்து நிறைய ஆசிரியர்கள் வட இந்தியாவிற்கு சென்று தமிழ் கற்று கொடுத்து இருக்கிறார்கள். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கான அடையாளம். இந்த காசி தமிழ் சங்கத்தின் அங்கமாக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்கிறார்கள் . புதிய கல்விக் கொள்கையை சமூகம் ஏற்று கொண்டுள்ளது . தமிழக மக்கள் ஏற்று கொண்டுள்ளனர் . தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளது . இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்