உள்ளூர் செய்திகள்

டி.பி.ஐ. அலுவலகத்தில் இனி எந்த விண்ணப்பங்களும் கிடையாது

சென்னை: "மாணவர்களுக்கு இனி எந்தவிதமான விண்ணப்பங்களும், தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் வழங்கப்பட மாட்டாது" என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிளஸ் 2 மாணவர்கள், விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்பினால், இனி மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாங்கவோ, சமர்ப்பிக்கவோ, இனி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தையோ, சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தையோ மாணவர்கள் அணுக வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் விண்ணப்பங்கள் வாங்க, ஒவ்வொரு முறையும் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சில நாட்களில் தள்ளுமுள்ளு நடந்து, போலீசார் வந்து கூட்டத்தை சரிசெய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகும். இது தேர்வுத்துறை அலுவல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்