இன்ஜி., படிப்பில் இடம் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
காலியிடம் இருந்தால் ஒரு இடத்தை ஒதுக்கி வைக்க இடைக்கால உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை காமராஜபுரத்தைச் சேசர்ந்த விஜயா என்பவர் தாக்கல் செசய்த மனு: எனது மகன் விக்னேஷ். கவுன்சிலிங்கின் போது, பி.இ., வகுப்பில் எலெட்க்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடத்தில் இடம் ஒதுக்க கோரினோம். அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட விளக்கக் குறிப்பேட்டில், தரச் சான்றிதழ்ப் பெற்ற கல்லூரி என திருவள்ளூர் மாவட்டத்தில் காஞ்சிபாடியில் உள்ள லட்சுமி சந்த் கல்லூரியைக் குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தோம். ஏ.ஐ.சி.டி.இ.,யின் என்.பி.ஏ., அமைப்பு மூலம் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதைப் பெறும் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது. ஒதுக்கீடு கடிதம் பெற்ற பின்னர், லட்சுமி சந்த் கல்லுõரிக்குச் சென்றோம். கல்லூரியைப் பார்த்த பிறகு எங்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டத் தகவலில் எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.உடனடியாக ஏ.ஐ.சி.டி.இ.,யின் வெப்சைட்டில் பார்த்தோம். தரச் சான்றிதழ் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பட்டியலில் லட்சுமி சந்த் கல்லூரி இடம் பெறவில்லை. எனவே, இந்தக் கல்லூரி நடத்தும் இ.சி.இ., படிப்புக்குத் தரச் சான்றிதழ் இல்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இதுகுறித்து மாணவர்கள் சேர்க்கைக்கான செயலரை நேரில் சந்தித்தோம். இப்பிரச்னை குறித்து முடிவு காண அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு அனுப்பியிருப்பதாக அவர் கூறினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரையும் நேரில் சந்தித்து மனு கொடுத்தேன். ஏற்கெனவே ஒதுக்கீடு செய்த இடத்தைப் பயன்படுத்தவில்லை என்றால், அதை இழக்க நேரிடும் என அவர் கூறினார். தரச் சசான்றிதழ்ப் பெற்ற படிப்பில் மகனைச் சேர்க்க முடியவில்லை. எனவே, தரச் சான்றிதழ் பெற்ற இ.சி.இ., படிப்பில் எனது மகனுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். ஒரு இடத்தைக் காலியாக வைத்திருக்க இடைக்கால உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை நீதிபதி குலசேசகரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் சிராஜூதீன் ஆஜரானார். இடங்கள் காலியாக இருந்தால் தரச் சான்றிதழ் பெற்ற இ.சி.இ., படிப்பில் ஒரு இடத்தைக் காலியாக வைத்திருக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி சம்பந்தப் பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.