உள்ளூர் செய்திகள்

அறிவியல் பாடங்கள் புறக்கணிப்பு; வணிகவியல் படிக்க ஆர்வம்!

பி.ஏ.வில் ஆங்கிலம், பி.எஸ்.சி., யில் கணிதம் போன்ற பிரிவுகளுக்கு ஒரளவு விண்ணப்பிக்கின்றனர். அதையடுத்து இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கு விண்ணப்பிப்போர் குறைந்து வருகின்றனர். கல்லூரி முதல்வர்கள் கூறியதாவது: பி.காம்., பாடத்திற்கு இரண்டாயிரம் பேர் விண்ணப்பித்தால், அறிவியலுக்கு 400 பேர் விண்ணப்பிக்கின்றனர். விலங்கியல், தாவரவியலுக்கு விண்ணப்பிப்போர் மிக குறைவு. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 40 இடங்களுக்கு, 150 பேர் வரை விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள். அறிவியல் பாடங்களை தேர்வு செய்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை அளிக்கிறது. இதன்மூலம் மேற்படிப்பு, ஆய்வு படிப்பை தொடரலாம். ஆனால் இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்து, படிப்பை முடித்து ஐ.டி., பணிகளில் வேலைக்குச் செல்கின்றனர். ஐ.ஐ.டி., போன்ற நல்ல நிறுவனங்களில் படித்து, நிறைய மதிப்பெண் பெற்றால் சரியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் ஐ.டி., துறையில் சேர்ந்தாலும், இரண்டாண்டுகளில் வேலை பிடிக்காமல் வெளியேறுகின்றனர். நிறைய மாணவர்கள் வேலையிலிருந்து விலகி எம்.இ., பி.எச்.டி., படிப்பை தொடர்கின்றனர். புதிதாக கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்