சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு :சென்னை மண்டலம் முதலிடம்
இது குறித்து, சி.பி.எஸ்.இ., தகவல் தொடர்பாளர் ரமா சர்மா கூறியதாவது: சென்னை உள்ளிட்ட ஏழு மண்டலங்களில் வெளியான சி.பி.எஸ்.இ.,பிளஸ் 2 தேர்வில் 86.93 சதவீத மாணவியரும், 77.83 சதவீத மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். பாட்னாவில் மட்டும், தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. வரும் 27ம் தேதி பாட்னா மண்டல தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். சென்னை மண்டலம் 91.32 சதவீதம் வெற்றி பெற்று முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடம் அஜ்மீர் 85.5 சதவீதமும், டில்லி 85.45 சதவீதம், புவனேஸ்வர் 84.7 சதவீதமும், பஞ்ச்குலா 79.85 சதவீதமும், அலகாபாத், 73 சதவீதமும், கவுகாத்தி மண்டலத்தில் 70.91 சதவீத மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாணவிகள் 85.28 சதவீதமும், மாணவர்கள் 75.90 சதவீதமும் வெற்றி பெற்றனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 81.71 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.84 சதவீதம் அதிகரித்துள்ளது. 45 வெளிநாட்டு மையங்களில் நடந்த சி.பி.எஸ்.இ., தேர்வில் மாணவியர் 96.85 சதவீதமும், ஆண்கள் 91.55 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளனர். வளைகுடா நாடுகளில் உள்ள 34 மையங்களில் நடந்த தேர்வில் 96.80 சதவீதம் பெண்களும், 91.32 சதவீதம் ஆண்களும் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு ரமா சர்மா கூறினார்.