உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டண அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, கோவிந்தராஜன் தலைமையிலான கல்விக் கட்டண நிர்ணயக்குழு, கட்டணத்தை நிர்ணயித்தது. அக்குழு நிர்ணயித்த கட்டணம் போதாது எனக் கூறி, 6,000 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. இதற்கிடையே, கோவிந்தராஜன் ராஜினாமா செய்தார். குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ரவிராஜபாண்டியன், கடந்த நவம்பரில் இருந்து, மேல் முறையீடு செய்த பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, அவர்கள் எதிர்பார்க்கும் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். இந்த விசாரணை, கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வார இறுதியில், புதிய கட்டண அறிவிப்பு வெளியாகும் தேதி வெளிவர உள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில், 6,000 பள்ளிகளுக்கும் புதிய கட்டண விவரம் அறிவிக்கப்பட உள்ளது. 15ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அதற்கு முன் கட்டண விவரங்களை வெளியிட்டுவிட்டால், எந்தவித பிரச்னைகளும் ஏற்படாது என தமிழக அரசும் கருதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்