அண்ணா கோளரங்கில் எஜு-சாட் மூலம் வகுப்பு
மத்திய அரசின் அறிவுசார் தொழில்நுட்பதுறையின் கீழ் இயங்கி வரும் விஞ்ஞான பிரச்சார் அமைப்பு சார்பில், செயற்கைகோள் வழி கல்வி திட்டத்தின் (எஜூ-சாட்) கீழ் வேதியியல் பாடம் திருச்சி அண்ணா கோளரங்கில் நடத்தப்பட்டது. டில்லியிலிருந்து ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை, சாட்டிலைட் உதவியுடன் அந்தந்த கோளரங்கில் அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி., மானிட்டரில் ஒளிபரப்பப்பட்டு, திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கில் வேதியியல் பாடம் நடத்தப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோளரங்க திட்ட இயக்குனர் அழகிரிசாமிராஜூ செய்திருந்தார். கடந்த மே 16ம் தேதி துவங்கிய செயற்கைகோள் வழிக்கல்வி திட்டம் ஜூன் 15ம் தேதி தொடர்ந்து நடக்கிறது.