செம்மொழி ஆராய்ச்சி மைய இடம்: அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பெரும்பாக்கம்- சோழிங்கநல்லூர் சாலையில், 17 ஏக்கர் நிலம் தமிழ் வளர்ச்சி துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் செம்மொழி ஆராய்ச்சி மையமும் அமைக்க முடிவு செசய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, நான்கு அடி உயரத்திற்கு வேலி அமைக்க முயன்றனர். வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆக்கிரமிப்பாளர்களை போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செம்மொழி ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சம்பந்தப்பட்ட துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் கண்ணபுர கண்ணன் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று செம்மொழி ஆய்வு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டது.