கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து கட்டண சலுகை
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நடப்பு கல்வியாண்டில், முதலாமாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு சென்னை, அண்ணா பல்கலை கலந்தாய்வுக்கு, வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் தவிர) சென்னைக்கு வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு, அரசுப் போக்குவரத்துக்கழக பஸ்களில், 50 சதவீத, இருவழி பயணக் கட்டணச் சலுகை அளிக்கப்படும். அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் மாணவ, மாணவியர், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தின் நகலை, சம்பந்தப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து அலுவலர்களிடம் சமர்ப்பித்து, அழைப்புக் கடிதத்தின் முன்பக்கத்தில், சான்றளித்த பின், தக்க பயணச் சீட்டுகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதே நடைமுறை, கலந்தாய்வை முடித்து ஊர் திரும்ப செல்வதற்கும் பொருந்தும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.