உள்ளூர் செய்திகள்

என்ஐஐடியின் கரியர்ஸ் அட் கேம்பஸ் புரோகிராம் துவக்கம்

கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் என்.ஐ.ஐ.டி.யின் கரியர்ஸ் அட் கேம்பஸ் திட்டத்தை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார். பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் இளைஞர்கள் தாங்கள் பட்டம் பெறும்போது, பணியாற்றுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றவர்களாக வெளிவரும் வகையில் இந்த பயிற்சி அமைந்துள்ளது. மாணவர்கள், அவர்கள் படிக்கும் கல்லூரியிலேயே இந்த தொழிற் பயிற்சிகளை கற்கும் வகையில் என்.ஐ.ஐ.டி. இந்த புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்தியாவில் தற்போது, பணியாற்றும் நபர்களுக்கான திறன் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை களையும் வகையில் என்ஐஐடி, இளைஞர்களின் பன்முகத்திறனை வளர்த்து, சிறந்த இளநிலை ஊழியர்களாக மாற்றும் திட்டத்துடன் இந்த பயிற்சியை அறிமுகப்படுத்துகிறது. படித்து முடித்து வெளிவரும் மாணவர்கள் தங்கள் முதல் பணிக்கு தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்றவர்களாகவும், படிப்பிற்கும், வேலைக்கும் இடையில் உள்ள தூரத்தைக் குறைத்து அதற்கு ஒரு பாலமாக இந்த பயிற்சி நிச்சயம் அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்