சரக்கு போக்குவரத்து துறையில் ஏராளமான வேலை வாய்ப்பு
இதுகுறித்து அவர் கூறியதாவது: போக்குவரத்து திட்ட மிடுதல் மற்றும் செயல்படுத்துதல் என்பது லாஜிஸ்டிக்ஸ். சரக்கு போக்குவரத்து துறையில் பெருமளவில் வேலை வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் சரக்கு போக்குவரத்து பயிற்சி துறையில் ஒரே நிறுவனமாக இந்திய லாஜிஸ்டிக்ஸ் இன்ஸ்டிடியூட் உள்ளது.பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு முக்கிய துறைமுகங்களில் பல்வேறு ரக கப்பல் கன்டெய்னர் டெர்மினல், கன்டெய்னர் சேமிப்பு மையங்கள், கப்பல் அதிபர்கள், கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், கஸ்டம்ஸ் ஹவுஸ் ஆகியவற்றின் செயல்முறை மற்றும் நடைமுறை பணிகள் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய லாஜிஸ்டிக்ஸ் இன்ஸ்டிடியூட், சரக்கு போக்குவரத்து நிர்வாகம் பற்றிய எம்.பி.ஏ., படிப்பை வழங்க மத்திய அரசின் யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற மங்கலயாதன் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது.டிப்ளமோ, அட்வான்ஸ் டிப்ளமோ மற்றும் மேல்நிலை டிப்ளமோ படிப்புகளை மாணவர்களுக்கு வழங்க ஐரோப்பிய லண்டன் வர்த்தக நிர்வாக பள்ளியுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. வேல்ஸ் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் செசய்து கல்வி பயிற்சி அளிக்கிறது. இவ்வாறு புஷ்பகுமார் கூறினார். மங்கலயாதன் பல்கலைக் கழக ஆலோசசகரும், முன்னாள் துணைவேந்தருமான குல்கர்னி, முன்னாள் அரசு செயலர் கரியாலி, கேப்டன் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.