கேம்பஸ் பணி நியமனத்தை தள்ளிப்போடும் சத்யம் நிறுவனம்
சாப்ட்வேர் துறையில் சிறந்த 4வது பெரிய நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் இதே மாதிரியான முயற்சிகளில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு கல்லூரிகளின் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பணியில் சேரும் நாளானது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்க பொருளாதாரத்தில் காணப்படும் பிரச்னைகளின் காரணமாகவும் இந்த முடிவை சத்யம் நிறுவனம் எடுத்திருக்கிறது. கடந்து ஆண்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வேலை தரும் ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. ஜூன் மாத வாக்கில் அவர்கள் ஐதராபாத்தில் பணியில் சேர வேண்டியிருக்கும் என கூறப்பட்டது. சிலருக்கு மருத்துவச் சோதனைகள் கூட நடத்தப்பட்டன. ஆனால் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் இந்தத் தேதிகளை இப்போது மாற்றி நிர்ணயித்துள்ளது. தற்போதுள்ள நிலையின் படி இவர்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் பணியில் சேர வேண்டிவரும் என தெரிகிறது.