பாளை சித்த மருத்துவக் கல்லூரிக்கு கவுன்சிலிங் எப்போது?
இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் அக்., 13முதல் 15 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில் இதுவரை அனுமதியளிக்கவில்லை. இதனால், இக்கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "அனுமதி கோரி தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், தேதி முடிவு செய்யப்படும்" என்றார்.