உள்ளூர் செய்திகள்

சர்வதேச அளவில் அழகப்பா பல்கலை செயல்பட வேண்டும்

சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அழகப்பா பல்கலைக் கழகம் செயல்பட வேண்டும் என்று தேசிய தர நிர்ணயக் குழு தலைவர் கூறியுள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட தேசிய தரநிர்ணயக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஆனந்த தே முகோபட்யாயா பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும், சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இணையாக இந்த பல்கலைக்கழகத்தினுடைய செயல்பாடு இருக்க வேண்டும். அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், இந்திய பல்கலைக்கழகங்களுடைய வளர்ச்சி பொறாமைப்படும்படியாக உள்ளது என்று கூறியுள்ளனர். ஒரு வகையில் இது பெருமைப்பட வேண்டியதாக இருப்பினும், இந்த ஆண்டு சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய பல்கலையும் இடம்பெறவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாக உள்ளது. இந்தியாவில் அனைத்து விதமான கல்வி நிலையங்களிலும், பாடத்திட்டங்களை குறைந்தது 2 வருடத்திற்கொருமுறை திருத்தி அமைக்க வேண்டும். மாணவர்களின் திறனை § மம்படுத்த தொழில்நுட்பவியல் சோதனைக் கூடங்கள் அனைத்து ஆசிரியர்களுடைய கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டும் என்று குழுத் தலைவர் கூறினார். தேசிய தரநிர்ணயக் குழு துணை ஆலோசகர் ஜெகன்னாத் சீதாரம் பேசுகையில், இந்த பல்கலைக்கழகம் வருங்காலத்தில் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இணையாக விளங்கும் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்