உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு மேரிடைம் அகடமி வழங்கும் சிறப்பு படிப்பு

தூத்துக்குடி: எஸ்.சி\எஸ்.டி. பிரிவைச் சார்ந்த மற்றும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்காக மட்டும், தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு மேரிடைம் அகடமி(Tamil Nadu Maritime Academy), Pre-Sea Course எனப்படும் கடல்சார் படிப்பை, பொது நோக்கத்திற்காக வழங்குகிறது. இந்தப் படிப்பை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மேற்கூறிய பிரிவைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்குகிறது. தமிழ்நாடு மேரிடைம் அகடமி என்பது, மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் கீழ் தன்னாட்சியுடன் செயல்பட்டுவரும் ஒரு நிறுவனமாகும். தகுதிகள் இப்படிப்பில் சேர, அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன், குறைந்தது 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வாரியம் நடத்திய தேர்வில், மொத்தமாக 40% மதிப்பெண்கள் எடுத்திருப்பதோடு, 10 அல்லது 12 அல்லது பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு ஆகிய ஏதேனும் ஒன்றில், ஆங்கிலப் பாடத்தில் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்பிற்கு திருமணமாகாத ஆண்களே வரவேற்கப்படுகிறார்கள். ஜனவரி 2, 2012ம் ஆண்டு சமயத்தில் 17.5 வயதைக் கடந்திருக்க வேண்டும் மற்றும் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். கட்டாயம் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். தேர்வுமுறை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பிறகே, இறுதியான மாணவர் சேர்ப்பு நடைபெறும். நடைமுறை இப்படிப்பிற்காக விண்ணப்பிக்கையில் ஒருவர், கடவுச்சீட்டு(Passport) கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கடவுச்சீட்டிற்காக விண்ணப்பித்திருக்கும் ரசீது இருந்தாலும் பரவாயில்லை. இதைத் தவிர, வருமானச் சான்றிதழ்(வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்), சாதிச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவை இருக்க வேண்டும். மேற்கூறிய சான்றுகளை சமர்ப்பிக்கத் தவறினால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஒதுக்கீடு மொத்த இடங்களில் 50% இடங்கள், பொறியியல் டிரேடு(Engineering Trades) படிப்பை 2 வருட முழுநேரப் படிப்பாக முடித்து, ஐ.டி.ஐ. டிரேடு(I.T.I Trade) சான்றிதழைப் பெற்றிருக்கும் நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் படிப்பு மாநில தொழில்நுட்ப வாரியம் அல்லது NCVT என்பதால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.சி\எஸ்.டி. பிரிவு மற்றும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கு 40 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பின் காலஅளவு 6 மாதங்கள்(25 வாரங்கள்). கட்டணம் இந்தப் படிப்பிற்கு ஆகும் கட்டணம் முழுவதும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். துவக்கம் 2012ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி தொடங்கும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம், இந்தப் படிப்பை முடித்தால், வேலைவாய்ப்பிற்கு தேவையான Onboard Training கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. விண்ணப்பங்கள் இதற்காக விண்ணப்பம் 03-11-2011 காலை 10.00 மணி முதல் 30-11-2011 மாலை 4.00 மணிவரை வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் கடைசிநாள் 30-11-2011, மாலை 5.00 மணி. விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெற, கீழ்கண்ட முகவரிக்கு, ரூ.300க்கு வரைவோலை( DD திருப்பி தரப்படமாட்டாது) எடுத்து, ஒரு வேண்டுகோள் கடிதத்துடன்(உங்கள் தெளிவான விலாசம் எழுதி) கீழ்காணும் முகவரிக்கு அனுப்பினால் போதும். Tamil Nadu Maritime Academy, Tuticorin என்று வரைவோலை எடுக்க வேண்டும். The Director Tamil Nadu Maritime Academy 333, South Beach Road, Thoothukudi - 628 001 0461 - 2320075/76/78 இதைப் பற்றி மேலும் அறிய www.tn.gov. in/tnma என்ற வலைத்தளம் செல்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்