ஸ்ரீ சத்யசாய் பள்ளிக்கு ‘ஏ பிளஸ்’ தரச்சான்று
சென்னை: கல்வி போதிப்பது மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை நடத்தும் சிறந்த பள்ளிகளில் ஒன் றாக தேர்வு பெற்ற நெமிலிச் சேரி சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேர் பள்ளி ‘ஏ பிளஸ்’ தரச்சான்று பெற்றுள்ளது. குரோம்பேட்டை அடுத்துள்ள நெமிலிச்சேரியில், சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி போதிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை மாணவர்கள் தங்கி படிக்க ‘ஹாஸ்டல்’ வசதியும் உள்ளது. இப்பள்ளியின் சார்பில், சிறந்த கல்வியை போதிப்தோடு மட்டுமல்லாமல் ஆன்மிக சிந்தனைகள் வளர்த்து வருகிறது. பல் வேறு கல்வி தொடர்பான, கலைநிகழ்சி களையும் நடத்தி வருகிறது. மும்பையில் உள்ள சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேர் சார்பில் தேசிய தரச்சான்று குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வுகளை மேற் கொள்வார்கள். அதனடிப்படையில் சிறந்து விளங்கும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிக்கு தரச்சான்று அளிப்பது வழக்கம் அதனடிப்படையில், சமீபத்தில் அந்த குழு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, ‘ஏ பிளஸ்’ தரச்சான்று அளித்துள்ளது. தரச்சான்றிதழ் அளிக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு சத்ய சாய் டிரஸ்ட் உறுப்பினர் பூபாலன் கூறுகையில்,‘தற்போது உலகில் நிலவும் பிரச்னைகளுக்கு சாய் கல்வித்திட்டம் மட்டுமே தீர்வுகாணமுடியும் என்று பகவான் சத்யசாய் பாபா, புட்டபர்த்தியில் நடந்த உலக அளவிலான மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்,’ என்றார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் பள்ளிக்கான தரசான்றை வழங்கி பேசுகையில்,‘ மாணவ, மாணவிகள் டாக்டர் அம்பேத்கர் போலவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் போலவும் உருவாக வேண்டும். கடவுளின் படைப்பில் மனிதகுலம் மட்டுமே கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும். அதற்கு கல்வி மிக அவசியம். குழந்தைகள் நல்ல கல்வியை பெற ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டில் அனைவருக்கும் கல்வி என்பது மிக அவசியம். இந்த பள்ளி சிறந்த கல்வி சேவை செய்து வருகிறது,’ என்றார்.