தாரளமாகக் கல்விக் கடன் வழங்க சிதம்பரம் வேண்டுகோள்
காரைக்குடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நடைபெற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மனிதாபிமான நோக்கில் கடன் விண்ணப்பங்களை வங்கிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். இதுவரை 12.5 லட்சம் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கல்விக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கல்விக் கடன் வழங்குவதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. மனித வளத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு கல்விக் கடன் வழங்க வேண்டியது அவசியம் என்றார் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்.