உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கணிதப் பாட இணைய தளம்

இதனை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் டி.என். சண்முகம் உருவாக்கியுள்ளார். பல இன்ஜினியரிங் கல்லூரிகளில் தகுதி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத நிலையில் இதுபோன்ற ஆன்லைன் பாடங்கள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இது இ-புக் மாதிரியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதைப்படித்து விட்டு, தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு மாணவர்களிடமிருந்து நாள்தோறும் 15லிருந்து 20 இ-மெயில்கள் வருகின்றன என்கிறார் பேராசிரியர் சண்முகம். வீடியோவில் பாடங்களைத் தயாரிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக இருந்த போது அப்துல் கலாம் என்னிடம் யோசனை கூறினார். கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் அதைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார். வீடியோ அடிப்படையில் பாடங்களை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விவரங்களுக்கு: http://www.annauniv.edu/maths/shan/index.htm


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்