உள்ளூர் செய்திகள்

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,), நேற்று ஆய்வு மேற்கொண்டது. இம்மருத்துவக் கல்லூரி, கடந்த மே மாதம் துவங்கியது. இந்திய மருத்துவ கவுன்சில் நிபுணர்களின், மூன்று கட்ட ஆய்விற்கு பின், எம்.பி.பி.எஸ்., வகுப்பு துவங்க அனுமதி கிடைத்தது. தற்போது, 100 மாணவர்கள் படிக்கின்றனர். மருத்துவமனைக்கும், தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த டாக்டர் வீரனகவுடா தலையிலான குழுவினர், நேற்று காலை, சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வந்தனர். இரு குழுவாக பிரிந்து ஆய்வு செய்தனர். டாக்டர், நர்ஸ், ஊழியர்களின் எண்ணிக்கை, உபகரணங்கள், மருந்து இருப்பு குறித்து சரிபார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்