மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டி: சாதனை மாணவிக்கு பாராட்டு
பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டியில், சாதனை படைத்த மாணவிக்கு பெரம்பலூர் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். சென்னையில் சென்ற மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஏழாவது தேசிய விளையாட்டு போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா, 100 மீட்டர், 200 ஓட்டத்தில் 2 தங்கப் பதக்கத்தை வென்றும், பெங்களூருவில் நடந்த 12வது தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று 4*400 ரிலே போட்டி, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கமும், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4*100 ரிலே போட்டி மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் வெள்ளி பதக்கமும், தமிழக அணியில் தனிநபர் போட்டிகளில் முதலிடமும் பெற்றார். பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு வெற்றிகளை பெற்ற மாற்றுத்திறனாளி திவ்யாவை, பெரம்பலூர் ஆட்சியர் தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.