உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் ரயில்வே விதிகளை மதித்து நடக்க வேண்டும்

திருச்சி: திருச்சி, இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில், பாட வாரியான பேரவைகள் துவக்க விழா மற்றும் மாணவர் பேரவைத் தலைவர் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. பள்ளிப் படிப்பை முடித்து, மேற்படிப்புக்காக கல்லூரி வரும் மாணவிகளுக்கு, புதிய சூழல் சற்றே வித்தியாசமான அனுபவத்தை தரும். புது நண்பர்கள், ஆசிரியர்கள், சுற்றுசூழல் என பார்ப்பவை அனைத்தும் புதிதாக இருக்கும். இந்த மனநிலையை மாற்றவும், ஆங்கில மொழியில் உரையாடவும் பயிற்சி அளிக்க, இந்திரா காந்தி கல்லூரியில், "பிரிட்ஜ் கோர்ஸ்" என்ற, வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த வகுப்பில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, கல்லூரியின் விதிமுறைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்த்து, நிர்வாகத்திற்கு மாணவர்களுக்கும், பாலமாக இருக்க, மாணவர் பேரவை தலைவர்கள் பதவியேற்பு விழா, பாடவாரியான பேரவைகளின், ஆண்டு துவக்க விழா என, பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளின் துவக்க விழா, நேற்று, இந்திராகாந்தி கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளா பங்கேற்று பேசியதாவது: "பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவிகளுக்கு, எனது பாராட்டுக்கள். தமிழ்வழி கற்ற மாணவர்களை, ஆங்கில மொழியின் எளிமையை புரிய வைத்து, "பிரிட்ஜ் கோர்ஸ்" என்ற, வகுப்புகளை துவங்கி, நடைமுறைப்படுத்தி வரும் கல்லூரிக்கு பாராட்டுக்கள். பெண்கள் கல்வி கற்றால், தலைமுறையே சிறப்பாக இருக்கும். மாணவிகள் கல்விக்காக, எதையும் தியாகம் செய்ய, முன்வர வேண்டும். இளம்தலைமுறையினர் மற்றவர்களுக்கு, முன் உதாரணமாக இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து படிக்க, ரயிலில் வரும் மாணவிகள், ரயில்வே விதிகளை மதித்து நடக்க வேண்டும். தண்டவாளத்தை கடந்து செல்லுதல், சிக்னல் போட்டபிறகும் இருசக்கர வாகனங்களில் செல்லுதல், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மதித்தால், விபத்துகளை குறைக்க முடியும்." இவ்வாறு இயக்குனர் மஞ்சுளா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்