கற்கும் ஆர்வத்தை தூண்டும் வீடியோ கேம் கல்வி
இதுதொடர்பாக, லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தின், கலை மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர், கிறிஸ் மே கூறியதாவது: படிப்பில் சிறிதும் நாட்டம் இல்லாத குழந்தைகளுக்கு, "வீடியோ கேம்" மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள், அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதன் மூலம், அவர்களது கற்கும் திறன் அதிகரிப்பது இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்விற்காக, 15 உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் 100 இளைஞர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களது கல்வி தொடர்பான விவரங்களை, "வீடியோ கேம்" மூலம் எளிதாக கிரகித்துக் கொள்வதை காணமுடிந்தது. பொதுவாக, படிப்பில் நாட்டம் இல்லாத இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதே நேரத்தில், அவர்களது கல்வி மற்றும் பயிற்சிகளை, "வீடியோ கேம்" மூலம் அளிக்கும்போது, அது அவர்களது வேலை மற்றும் கல்வி தொடர்பான விவகாரங்களில், நல்ல பலன்களை தருகிறது. எனவே, கல்வி நிலையங்களில், இந்த, "வீடியோ கேம்" மூலம் அளிக்கப்படும் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டு உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.