உள்ளூர் செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு நுழைவு தேர்வு: மணீஷ் திவாரி யோசனை

புதுடில்லி: "பத்திரிகையாளர்களாக வர விரும்புவோருக்கு, பொது நுழைவுத் தேர்வு வைக்க வேண்டும்" என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர், மணீஷ் திவாரி கூறினார். காங்., மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சருமான, மணீஷ் திவாரி கூறியதாவது: மருத்துவ துறை மற்  றும் பார் கவுன்சில் ஆகியவற்றில், பொது நுழைவுத் தேர்வு நடத்துவது போல், பத்திரிகை துறையிலும், பொது நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுவோருக்கு, பத்திரிகையாளர் ஆவதற்கான உரிமம் கொடுக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு, தரத்தை நிர்ணயிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சில பத்திரிகை நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றுவோருக்கு, சிறப்பான பயிற்சிகள் கொடுக்கின்றன. சில நிறுவனங்கள், இதுபோன்ற பயிற்சிகளை அளிப்பது இல்லை. எனவே, இதற்கென, பொது நுழைவுத் தேர்வை நடத்தினால், பல்வேறு துறைகளில் இருப்பவர்கள், பத்திரிகை துறைக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். டிவி சேனல்களில், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது, 12 நிமிடத்துக்கு ஒருமுறை மட்டுமே, விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்ற ஆலோசனை குறித்து, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ஆய்வு செய்து வருகிறது. அரசியல் கட்சிகளிடம், பணம் வாங்கி, செய்திகளை வெளியிடும் போக்கை, குற்றம் என அறிவிப்பது, அபராதம் விதிப்பது, உரிமத்தை நிறுத்தி வைப்பது ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, மணீஷ் திவாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்