உள்ளூர் செய்திகள்

ஆந்திரத்தில் தனியார் கல்வி நிறுவன வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. எனினும், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை இனத்தவரைத் தேர்வு செய்யும்போது, இந்தச் சட்டம் அதில் குறுக்கிடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை திருத்தி அமைக்கும்படி உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஆந்திர பள்ளிக் கல்வி அமைச்சர் சி. தாமோதர் ராஜ் நரசிம்மா தெரிவித்துள்ளார். இந்த புதிய சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்