உள்ளூர் செய்திகள்

யூ.ஜி.சி., நிதியில் முறைகேடு? இளையான்குடி கல்லூரியில் சோதனை

சிவகங்கை: சிவகங்கை, இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரிக்கு வழங்கிய, பல்கலை மானியக்குழு (யூ.ஜி.சி.,) நிதியில், முறைகேடு புகார் தொடர்பாக, சி.பி.ஐ., ரெய்டு நடந்தது. இக்கல்லூரியில், நேற்று காலை, 8:30 மணிக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் நான்கு பேர், சோதனையில் ஈடுபட்டனர். தாளாளர் ஜபருல்லாகானிடம் விசாரணை நடத்தினர்; மாலை, 3:30 மணி வரை, சோதனை நீடித்தது. கல்லூரி தாளாளர் வீடுகளிலும், தனித்தனியாக சோதனை நடத்தினர். இதுகுறித்து, தாளாளர் கூறுகையில், "2011ல், கல்லூரி விடுதி கட்டுவதற்காக, 80 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதன்படி, மாணவியர் விடுதி திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆட்சிமன்ற குழுத் தேர்தலில் தோல்வியுற்ற சிலர், பல்கலை மானியக்குழு நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக, கொடுத்த புகாரில், சி.பி.ஐ., சோதனை நடந்தது. ஆவணங்களை காண்பித்து, விளக்கம் அளித்துள்ளோம்" என்றார். இந்நிலையில், அழகப்பா பல்கலை தொலை நிலைக்கல்வி இயக்குனர் குருமூர்த்தியிடமும், நேற்று, சி.பி.ஐ., குழுவினர் விசாரித்தனர். இவர், பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளின், வளர்ச்சிக்குழு, டீன் ஆக இருந்த போது, இந்நிதி வழங்கியதால், அவரிடமும் விசாரணை நடந்ததாக, தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்