உள்ளூர் செய்திகள்

புத்தகங்களை இழந்த கடலோர மாணவர்களுக்கு புதிய புத்தகம்

சென்னை: தொடர் மழை காரணமாக பாடப் புத்தகங்களை இழந்த கடலோர மாவட்ட மாணவர்களுக்கு, இந்த வாரத்திற்குள் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பெய்துவந்த கன மழை காரணமாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுடைய பாடப் புத்தகங்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு இந்த வாரத்திற்குள் புதிய பாடப் புத்தகங்களை வழங்குவதற்கு துறை உத்தரவிட்டுள்ளது. தேவைப்படும் பாடப் புத்தகங்கள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்து, துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேவைப்படும் பாடப் புத்தகங்கள் குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம். முதன்மைக் கல்வி அலுவலர்கள், அறிக்கை அனுப்பியதும் தேவையான பாடப் புத்தகங்கள் இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்