பாலிடெக்னிக்கில் உதவியாளர் பணி: பதிவு விபரம் வெளியீடு
சிவகங்கை: செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது 2014 ஜூலை 1ன் படி தாழ்த்தப்பட்டோர் 35, மிக பிற்பட்டோர் 32க்குள் இருத்தல் அவசியம். பிளஸ் 2 முடித்திருந்தால் வயது வரம்பில்லை. மேலும் விபரம் வேண்டுவோர், சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு ஜூன் 20 அன்று உரிய சான்றுகளுடன் சென்று பதிவு மூப்பு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.