உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு இசைப் பல்கலையில் புதிய முதுநிலை படிப்புகள்

சென்னை: தமிழ்நாடு இசைப் பல்கலையில், 2014ம் கல்வியாண்டில், 8 புதிய முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்தகவலை, அப்பல்கலை துணைவேந்தர் வீணை காயத்ரி கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: குரல் இசை, வீணை இசை, வயலின் இசை, குழல் இசை, நாதஸ்வரம், மிருதங்கம், தவில் மற்றும் பரத நாட்டியம் ஆகிய 8 பாடங்களில் முதுநிலைப் பட்டப் படிப்பும்(M.A), டிஜிட்டல் போட்டோகிராபி மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் ஆகிய பாடங்களில், முதுநிலை டிப்ளமோ படிப்பும், இந்தக் கல்வியாண்டில் வழங்கப்படவுள்ளன. B.A. Music படித்தவர்கள் மட்டுமின்றி, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை முடித்தவர்களும், மேற்கண்ட முதுநிலைப் படிப்புகளில் சேரலாம். இதற்கான வயதுவரம்பு எதுவும் கிடையாது. அதேசமயம், அடிப்படை இசை அறிவு அவசியம். ஒவ்வொரு படிப்பிலும், சுமார் 25 முதல் 30 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவர். பல்கலையின் தேர்வுக்குழுவினர் மூலம் மாணவர்கள் படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது. SC/ST பிரிவினருக்கு ரூ.150 மட்டுமே. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜுலை 21ம் தேதி. ஆகஸ்ட் 2 முதல் வகுப்புகள் தொடங்கும். இதுகுறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.tnmfau.in என்ற வலைதளம் செல்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்