உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் திருடுபோன விலையில்லா லேப்-டாப்கள்

திருநெல்வேலி: நெல்லை அருகே அரசு பள்ளியின் பூட்டை உடைத்து லேப்-டாப்கள் திருட்டு போயுள்ளன. திருநெல்வேலி, வீரவநல்லுாரை அடுத்துள்ள வெள்ளங்குழியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 39 லேப்டாப்கள் வந்திருந்தன. அவற்றை அங்குள்ள இயற்பியல் லேப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நேற்றுமுன்தினம், இரவில் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 13 லேப்-டாப்களை மட்டும் எடுத்துச்சென்று உள்ளனர். தலைமையாசிரியர் மாரியப்பன் புகாரின் பேரில் வீரவநல்லுார் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்