உள்ளூர் செய்திகள்

இறுதி கட்டத்தை எட்டியது வேளாண்மை படிப்பிற்கான கவுன்சிலிங்

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் வேளாண்மை படிப்புகளில் உள்ள 1,820 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக, கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கடந்த ஜுன் 30ம் தேதி முதல் நடத்திவரும் கவுன்சிலிங்கிற்கு ஜுலை 11ம் தேதியான இன்று கடைசி நாள். இந்த கவுன்சிலிங்கிற்கு ஜுலை 10 வரை 4,498 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். 199.50 என்ற கட்-ஆப் மதிப்பெண்ணிலிருந்து கலந்தாய்வு தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 மாணவர்கள் வரை கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். ஜுலை 11ம் தேதி, முதல்கட்ட கவுன்சிலிங்கின் கடைசி நாள். இதுவரை 1,810 இடங்கள் நிரம்பி விட்டன. இன்னும் 10 இடங்களே மீதமுள்ள நிலையில், இன்று(ஜுலை 11) இறுதிகட்ட கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று முழு இடங்களும் பூர்த்தியாகாத பட்சத்தில், 2ம் கட்ட கவுன்சிலிங், ஜுலை 14 முதல் 17 வரை நடைபெறும். அதனையடுத்து, ஜுலை 27 முதல் வகுப்புகள் துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்