உள்ளூர் செய்திகள்

தலைமையாசிரியை மீதான புகார் மனு தொடர்பாக விசாரணை

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை மீதான புகார் மனு தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1, 310 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியையாக ஜெயந்தி பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவர்கள் பெயரில் கலெக்டர் சம்பத், முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பினர். தலைமையாசிரியையின் முறைகேடுகளை கண்டித்து ஆக.8ம் தேதி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். விழுப்புரம் கல்வி அலுவலர் மாதவன் நேற்று முன்தினம் (7ம் தேதி) பள்ளிக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். புகாரில் கூறப்பட்டிருந்த 6 மாணவிகளின் பெயர்களில் 3 பெயர்கள் போலியானது. மீதமுள்ள 3 மாணவிகளும் புகார் மனு அனுப்பவில்லை என தெரிந்தது. மனுவில் கூறியது போல் ஆக.8ம் தேதி (நேற்று) பள்ளியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவில்லை. அனுமதி பெறாத போராட்ட அறிவிப்பு தொடர்பாக கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் அரிக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்