உள்ளூர் செய்திகள்

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

குன்னூர்: குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் பாரதிய வித்யா பவன் நிறுவனத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. உதவி தலைமையாசிரியர் பாக்கியசாமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சூசைராஜ் முன்னிலை வகித்தார். தொண்டு நிறுவனத்தின் தலைமைபொறுப்பாளர் ஸ்ரீமதி தலைமையில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான 14 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்