உள்ளூர் செய்திகள்

‘பிசினஸ் மாடல் ஐடியா’ சொல்லும் கல்லூரி மாணவர்கள்

மதுரை: தொழில் துவங்குவதற்கான யோசனை (பிசினஸ் மாடல் ஐடியா) குறித்து கல்லூரி மாணவர்கள், இளம்தொழில் முனைவோர் ஆகியோருக்கான இறுதிப்போட்டி மதுரையில் நவ.,8 ல் நடக்கிறது. சி.ஐ.ஐ.,யின் ’யங் இந்தியன்ஸ்’ மற்றும் ’நேட்டிவ் லீட்’ அமைப்பின் சார்பாக இப்போட்டி நடத்தப்படுகிறது. முதற்சுற்றில் மாணவர்கள் தரப்பில் 60 பேர் பங்கேற்றனர். இதிலிருந்து 10 மாணவர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்கள் மற்றும் இளம்தொழில்முனைவோர் சார்பில் 180 தொழில் யோசனைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் இறுதிப்போட்டிக்கு 20 யோசனைகள் தேர்வு செய்யப்பட்டன. இறுதிப்போட்டியில் பங்கேற்பவர்களில் இருந்து இரு பிரிவுகளிலும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவர். இப்போட்டி தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்