உள்ளூர் செய்திகள்

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி!

விருதுநகர்: மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின்கீழ் 44 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி, சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவ.,11 வரை நடக்கிறது. மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தலைமை வகித்து பேசுகையில், "அடுத்தாண்டு நடக்க உள்ள 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைக்க வேண்டும். மெல்லக் கற்கும் மாணவர்களின் திறமையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்" என்றார். விருதுநகர் கல்விமாவட்ட அதிகாரி ராமச்சந்திரன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்