உள்ளூர் செய்திகள்

காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் நியமனம் எப்போது?

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் பணியிடம், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் நியமன தீர்ப்புக்கு பிறகே நிரப்பப்பட வாய்ப்புள்ளது. அழகப்பா பல்கலைக்கு புதிய துணைவேந்தரை பல்கலை மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிந்துரைப்பதற்காக தேடல் குழு பல முறை சென்னையில் கூடி ஆலோசனை நடத்தியது. லோக்சபா தேர்தல், துணைவேந்தர் நியமனத்திற்கு எதிரான வழக்குகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளால் தாமதம் ஏற்பட்டது. இதனால் நிர்வாகத்தில் முடிவுகள் எடுப்பது, புதிய கல்வி கொள்கைகள் வகுப்பது, ஆற்றல்சார் தகுதிபெற்று கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறுவது, பட்டமளிப்பு விழா நடத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தை ஐகோர்ட் ரத்து செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. அழகப்பா பல்கலை துணைவேந்தர் நியமனம் குறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் கூறியதாவது: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் நியமன தீர்ப்பை பொறுத்தே, அழகப்பா பல்கலை துணைவேந்தர் நியமனம் குறித்த இறுதி முடிவை அரசு எடுக்க உள்ளது. தீர்ப்பு அரசுக்கு சாதகமாக அமைந்தால் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்படுபவர் துணைவேந்தராகும் வாய்ப்பு உள்ளது. எதிராக அமைந்தால், யு.ஜி.சி.,யின் நடைமுறைக்கே விட்டுவிடவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்